அண்மையில் ஏற்பட்ட பெங்கல் புயல் அனர்த்த நிலைமையில் போது சிறப்பாக களப்பணியாற்றிய உள்ளுராட்சி மன்ற ஊழியர்களை கௌவரவிக்கும் முகமாக வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் (04.12.2024) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் நகரசபை செயலாளர் தலைமையில் வெள்ள அனர்த்த பணிகளில் களப்பணியற்றிய 14 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுனர் பிரதம விருந்தினராகவும், வட மாகாண பிரதம செயலாளர் சிறப்பு விருந்தினராகவும் எமது மாவட்ட அரச அதிபர், ஏனைய மாவட்ட அரச அதிபர்கள், எமது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், ஏனைய மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மன்னார் நகரசபை ஊழியர்களுக்கு
வட மாகாண கௌரவ ஆளுனரால் மெச்சுரை வழங்கப்பட்ட போது…
மன்னார் நகர சபை நிர்வாக எல்லைகுட்பட்ட கடந்த நாட்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட பொது மக்கள் பாடசாலைகள், பொதுநோக்கு மண்டபங்கள், ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டு தற்போது மக்கள் மீள வீடு திரும்பிள்ளனர்.
மன்னார் மாவட்ட அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக பாடசாலைகள், பொதுநோக்கு மண்டபங்கள் மீள பயன்படுத்துவதற்கு ஏற்றவகையில் மன்னார் நகரசபை செயலாளரின் பணிப்பின் பேரில் நகரசபை ஊழியர்களினால் திண்மக்கழிவகற்றல் மற்றும் மன்னார் MOH,PHI ஒத்துழைப்புடன் சுகாதார முறையில் தொற்று நீக்கி எமது நகரசபை ஊழியர்கள் மூலம் செய்யப்படும் போது….
கேள்வி அறிவித்தல் – மன்னார் நகரசபை
பாவனையற்ற வாகனங்களினை இரும்பு விலைக்கு விற்பனை செய்தல்
கேள்வி இல :- NP/14/42/(2)/VEH/AUC/2024
மன்னார் நகரசபையில் பாவனையற்று வாகனப்பதிவு இரத்து செய்யப்பட்ட பின்வரும் வாகனங்களை இரும்பு விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆர்வமுள்ள கேள்விதாரர்களிடமிருந்து பொறியிடப்பட்ட கேள்வி மனுப்பத்திரங்கள் கோரப்படுகின்றன.
CamScanner 11-08-2024 09.32
கேள்வி அறிவித்தல் – 2025
மன்னார் நகரசபைக்குச் சொந்தமான கீழ் காணும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன.
கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி – 01.11.1014/ 21.11.2024
பி.ப – 12.00 மணி வரை