கேள்வி அறிவித்தல் – மன்னார் நகரசபை
பாவனையற்ற வாகனங்களினை இரும்பு விலைக்கு விற்பனை செய்தல்
கேள்வி இல :- NP/14/42/(2)/VEH/AUC/2024
மன்னார் நகரசபையில் பாவனையற்று வாகனப்பதிவு இரத்து செய்யப்பட்ட பின்வரும் வாகனங்களை இரும்பு விலைக்கு விற்பனை செய்வதற்காக ஆர்வமுள்ள கேள்விதாரர்களிடமிருந்து பொறியிடப்பட்ட கேள்வி மனுப்பத்திரங்கள் கோரப்படுகின்றன.
CamScanner 11-08-2024 09.32
கேள்வி அறிவித்தல் – 2025
மன்னார் நகரசபைக்குச் சொந்தமான கீழ் காணும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன.
கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி – 01.11.1014/ 21.11.2024
பி.ப – 12.00 மணி வரை
1,சபை நிதி வேலைத்திட்டத்தில் மனங்கட்டுக்கொட்டு கிழக்கு வீதி வடிகால் அபிவிருத்தி
2.உப்புக்குளம் வடக்கு , நியுமூர்சிற் மற்றும் மன்னிமுனை வீதிகளுக்கான வடிகால்வாய்கள் அமைத்தல்
3.41,49 வீட்டுத்திட்டத்தில் concrete வீதி கட்டுமாணம்
4.தரவன்கோட்டை பிரதான வீதியில் concrete வீதி கட்டுமாணம் மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை (CBG) போன்ற வேலைத்திட்டங்களிற்கான கேள்வி விலை கோரல் கோரப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.
New Microsoft Word Document FB Work 2024
தகவல்
நகரசபை,
மன்னார்
மக்கள் பங்களிப்புடனான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – 2025
மன்னார் நகரசபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்குமான கூட்டம் குறிப்பிட்ட திகதிகளில் நடைபெற்று அவர்களின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன. பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.09.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பள்ளிமுனை கிழக்கு ,மேற்கு சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்று கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் மன்னார் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு நண்பகல் 2.30 மணியளவில் உப்புக்குளம் வடக்கு , தெற்கு , மூர் வீதி ஆகிய சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்று கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அவர்களது அத்தியாவசிய தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டது. இவ்வாறாக ஒரு நாளில் காலை, மாலை என இரு தடவைகளில் வட்டாரங்களிற்கான கூட்டம் இடம்பெற்றறது.
இதில் மன்னார் நகரசபையின் அலுவலர்கள்,சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.
மன்னார் நகரசபையின் 2025்ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் பின்வரும் திகதிகளில் மன்னார் நகரசபை பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் பங்குபற்றலாம்.
ward level meeting time shedule