கட்டிட அபிவிருத்தி அனுமதி
காணி மற்றும் கட்டிடங்களின் அபிவிருத்தி
நகரமயமாகி வருகின்ற மற்றும் எதிர்காலத்தில் நகரமயமாவதற்கு வாய்ப்புள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் பிரேரிக்கப்படுகின்ற பிரதேசத்திற்குள் உள்ள ஏதேனும் ஒரு காணியை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பகுதிகளாகப் பிரிக்கும்போது அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காணித்துண்டுகளை ஒருங்கிணைக்கும்போது, சுகாதாரத்திற்கு மற்றும் சூழலுக்கு ஏற்படுகின்ற தாக்கத்தைக் குறைப்பதற்குத் தேவையான ஒழுங்கமைக்கும் அதிகாரம், நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் உள்ளுராட்சி மன்றங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஏதேனும் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரப் பிரதேசத்திற்குள், அபிவிருத்தியடைந்த பிரதேசங்கள் என்ற ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்திற்குள் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து காணி துண்டு பிரிப்புகளும், காணி ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காகவும் உள்ளுராட்சி மன்றங்களின் அனுமதி பெறப்படுதல் வேண்டும்.