சபை வரலாறு

 

1899ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட உள்;ராட்சி மன்ற சட்டத்தின் அடிப்படையில் 1924ம் ஆண்டின் 9ம் இலக்க கிராமசபைச் சட்டத்தின் 2ம் பிரிவுக்கமைய கிராம சபைகள் உருவாக்கப்பட்டது. இதில் மன்னார் பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மாந்தை தெற்கு (உயிலங்குளம்), மன்னார் கிழக்கு, மன்னார் மேற்கு (தலைமன்னார்) ஆகியவை உள்ளடங்கும். இதற்கு மேலதிகமாக 1949.04.22ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின்படி எருக்கலம்பிட்டி, பேசாலை, தாராபுரம், திருக்கேதீஸ்வரம் ஆகியன கிராமசபை அமைப்புக்களில் மேலதிகமாக சேர்த்துக்கொள்ளப்பட்டன.

 

தொடர்ந்து இக்கிராம சபைகள் அதன் அங்கத்தவர்க;டாக தலைவர் ஒருவரை தெரிவு செய்து, அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி செயற்பட்டு வந்தன. 1949 – 1975ம் ஆண்டு வரை கிராம சபையின் நிர்வாக முறை முழுமையாக மக்களிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. இதில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்கள் மூலமே அக்கிராமத்தின் நிர்வாக, அபிவிருத்திச் செயற்பாடுகள் இடம்பெற்று வந்தன.

 

1975 – 1980 வரையான காலப் பகுதியில் இக்கிராம சபைகள் அரச நிர்வாகத்தின் கீழ் உள்ள பிராந்திய உள்;ராட்சி உதவி ஆணையாளரின் கீழ் கொண்டுவரப்பட்டு, ஒவ்வொரு கிராம சபைகளுக்கும் விசேட ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மூலமே கிராம அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. 1980, 1981ம் ஆண்டு காலப் பகுதிகளில் நடைமுறைக்கு வந்த மாவட்ட அபிவிருத்திச் சபை சட்ட மூலத்திற்கு அமைவாக, மன்னார் மாவட்டத்திற்கு மாவட்ட அபிவிருத்திச் சபை உருவாக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் பட்டினசபையின் அதிகாரம் முடிவுறுத்தப்பட்டதுடன் கிராம சபைகள் மாவட்ட அபிவிருத்திச் சபையின் உப அலுவலகமாக செயற்பட்டு வந்தது. ஆனால் இப்பிரதேசத்தில் கிராம சபைக்கென அங்கத்தவர்களோ, உறுப்பினர்களோ மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு தெரிவு செய்யப்படவில்லை. இச்சபைக்கு நிர்ணயிக்கப்பட்ட அங்கத்தவர்களும் அவர்களில் அதிக பட்ச வாக்குகளைப் பெற்றவர் தலைவராகவும் தெரிவுசெய்யப்பட்டார். 1983ம் ஆண்டு இறுதியுடன் மாவட்ட அபிவிருத்திச் சபை முடிவுறுத்தப்பட்டது. 1984, 1985, 1986 வரையிலான காலப் பகுதியில் கிராமோதய சபை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் மூலம் ஒரு கிராம சேவையாளர் பிரிவின் கீழ் உள்ள கிராம மட்ட சங்கங்களின் தலைவர்கள் கிராமோதய சபை உறுப்பினர்களாக இருப்பர். இவ்வுறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து கிராமோதய சபை தலைவரை தெரிவு செய்து, இச்சபையின் மூலம் அந்தந்த அதிகாரப் பிரதேசத்திற்குள் தங்களது அபிவிருத்தி செயற்றிட்டங்களை முன்னெடுத்தனர். அத்தோடு இப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராமோதய சபைத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அதிகாரமற்ற கௌரவ பிரதேச சபை தலைவர் ஒருவரைத் தெரிவுசெய்தனர். 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை திருத்தச் சட்டத்தின் மூலம் ஒரு பிரதேச செயலாளர் பிரிவுக்கு ஒரு பிரதேச சபை என வரையறுக்கப்பட்டு பிரதேச சபை உருவாக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழலும், நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த யுத்தமும்; தேர்தல் நடாத்தப்படாததற்குரிய காரணங்களாகும். இதனால் இங்கு விசேட ஆணையாளர்களும், செயலாளர்களும் நிர்வாகத்தைப் பொறுப்பேற்று செயற்படுத்தினர்;. மன்னார் நகரம் அபிவிருத்தி அடைந்து வந்தமையாலும், பிரதேச சபை பணிகளை திறம்பட செயற்படுத்துவதில் சிரமங்கள் ஏற்பட்டதனாலும் பிரதேச சபைச் சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதனால் நகர சபை உருவாக்கமும் அத்தியாவசியமாயிற்று. இதற்கமைய நகர சபை கட்டளைச் சட்டம் 255 அத்தியாயம் 2ஆம் 3ஆம் 5ஆம் 9ஆம் பிரிவுக்கமைய 2005ம் ஆண்டு மார்கழி மாதம் 12ம் திகதி 1423ஃ2ஆம் இலக்க அதி விசேட வர்த்தமானி மூலம் மன்னார் நகர சபை புதிதாக உருவாக்கப்பட்டது. இதன் மூலம் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மன்னார் நகரமானது நகர சபையாக உருவாக்கப்பட்டதுடன், 2006 ஏப்ரல் மாதம் 15ம் திகதியிலிருந்து மன்னார் நகர சபையின் பதவிக்காலம் ஆரம்பமானது. மன்னார் நகரசபையாக மாற்றப்பட்ட பின் முதலாவது உள்;ராட்சி சபைத் தேர்தலானது 2011-04-20 ம் திகதி நடைபெற்று தலைவர், உப தலைவர் உட்பட 07 பேர் அடங்கியதான சபை ஆட்சியமைத்தது. இக்காலப்பகுதியில் திருமதி.ரொசாறியோ பெனடிக்ற் குரூஸ் அவர்கள் நகர சபையின் செயலாளராக கடமையாற்றினார். மன்னார் நகரசபையாக மாற்றப்பட்ட பின் இரண்டாவது உள்;ராட்சி சபைத் தேர்தலானது சிறு மாற்றத்துடன் 7 வாட்டாரத்தில் 2 வட்டாரங்கள் இரட்டைத் தொகுதியாக சேர்த்து 09 பேரையும் தொகுதிவாரியாக 7பேரையும் சேர்த்து 2018-04-20 ம் திகதி நடைபெற்று தலைவர், உப தலைவர் உட்பட 16 பேர் அடங்கியதான சபை ஆட்சியமைத்தது. இக்காலப்பகுதியில் திரு.எக்.எல்.றெனால்ட் அவர்கள் நகர சபையின் செயலாளராக கடமையாற்றினார்

Professional Team for you

S.Krishnathasan
Art Director

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing eiusmod tempor incididunt ut labore et dolore magna.

Catherine Soft

CEO / Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing eiusmod tempor incididunt ut labore et dolore magna.

team2
team3
Jack Wilson
CEO / Founder

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing eiusmod tempor incididunt ut labore et dolore magna.