2025 ஆம் ஆண்டிற்கான ஆலோசனை குழு அங்கத்தவர்கள் தெரிவு

எமது நகரசபையின் பொதுநூலகத்தின் அபிவிருத்தி ஆலோசனை குழுக் கூட்டமானது 13.02.2025 ம் திகதி பி.ப 2.00 மணிக்கு பொது நூலகத்தில் மன்னார் நகரசபை செயலாளர் தலைமையில் மன்னார் பொது நூலகத்திற்கான 2025 ஆம் ஆண்டிற்கான ஆலோசனை குழு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் கூட்டமும் மற்றும் கொகா மென்பொருள் மூலம் வாசகர்கள் புத்தகங்களை இனங்கண்டு பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் தொடர்பான ஆயத்த வேலைகள் பூரணப்படுத்தப்பட்டு அதனை நடைமுறைப்படுத்தும் கலந்துரையாடல் நடைபெற்றது. கலந்துரையாடளில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்இ பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர்இ மன்ஃதோட்டவெளி அ.த.க.பாடசாலை ஆசிரியர்(வாசகர்)இ மன்ஃபு.ச.பெ.தே பாடசாலை நூலகம்இ மன்னார் நகரசபை பொது சுகாதார பரிசோதகர்இ பொது சுகாதார பரிசோதகர்இ நகரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் பங்களிப்புடான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – 2025 – மன்னார் நகரசபை

மக்கள் பங்களிப்புடனான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – 2025
மன்னார் நகரசபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்குமான கூட்டம் குறிப்பிட்ட  திகதிகளில் நடைபெற்று அவர்களின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன.  பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.09.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பள்ளிமுனை கிழக்கு ,மேற்கு சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்று கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன்   மன்னார் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு நண்பகல் 2.30 மணியளவில் உப்புக்குளம் வடக்கு , தெற்கு , மூர் வீதி ஆகிய சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்று கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன்  அபிவிருத்தி வேலைகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அவர்களது அத்தியாவசிய தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டது. இவ்வாறாக ஒரு நாளில் காலை, மாலை என இரு தடவைகளில் வட்டாரங்களிற்கான கூட்டம் இடம்பெற்றறது.
ward level meeting time shedule
 இதில் மன்னார் நகரசபையின்  அலுவலர்கள்,சனசமூகநிலைய பிரதிநிதிகள்  மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.