உள்ளுராட்சி வாரம்

உள்ளுராட்சி வார நிகழ்வுகள்

மன்னார் நகரசபையில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்டு இயங்கும் சனசமூகநிலையங்களுக்கிடையில் இடம்பெற்று அதில் வெற்றியீட்டிய அணிக்கு வெற்றிக்கிண்ணங்களும் ,சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வானது உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு கிரிக்கெற் மற்றும் வலைப்பந்து போன்ற விளையாட்டுக்களும் ,கோலாட்டம் போன்ற கலைநிகழ்வுகளும் இடம்பெற்று அதில் வெற்றியீட்டிய அணிக்கு வெற்றிக்கிண்ணங்களும் ,சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வு அவர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமன்றி அவர்களுக்கிடையில் ஒற்றுமையையும் மற்றும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியது.

அதுமட்டுமன்றி உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு பல்வேறு செயற்பாடுகள் நகரசபையால் மேற்கொள்ளப்பட்டது. அதாவது சோலைவரி அறவிடுதல் ,சிரமதானம் மற்றும் வாசிப்பு மாத நிகழ்வுகள் என பல்வேறு செயற்பாடுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

விளையாட்டுக்கள்

கோலாட்டம்

.

 

போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம்

உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான மன்னார் நகரசபையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களது ஆரோக்கியத்தை பேணும் வகையில் போசாக்கு உணவுத்திட்டம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதை தொன்று தொட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது . அதாவது மன்னார் மாவட்டத்தில் நகரசபை எல்லைக்குட்பட்ட மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இவ் போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.மற்றும் இவ் உணவுத்திட்டத்தில் முதியோர்களும் உள்வாங்கப்படுவதுடன் இத் திட்டம் அவர்களது வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. கிட்டத்தட்ட 180 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கி அவர்களது ஆரோக்கிய வளர்ச்சிக்கு நகரசபை தங்களால் முடிந்தளவு சேவை ஆற்றி வருகின்றது. அதுமட்டுமன்றி இனிவருங்காலங்களிலும் இதனுடைய செயற்பாடுகள் உச்ச அளவில் அடையும் என்பதில் ஜயமில்லை.

தீயணைப்பு சேவை

மன்னார் நகரசபையின் செயலாளர் ,உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் செயற்பாட்டில் தீயணைப்பு வாகனம் இயங்கும் நிலை

மன்னார் மாவட்ட அபிவிருத்தி கூட்டத்தின் தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் பிரதேச சபையிடமிருந்து மன்னார் நகரசபைக்கு வழங்கப்பட்ட தீயணைப்பு வாகனம் தற்போது புணரமைக்கப்பட்டு திருத்தப்பட்டு இயங்கும் நிலையில் உள்ளது.இது தொடர்பாக எமது சபை ஊழியர்களுக்கு ஆரம்ப பயிற்சி வழங்குவதற்கு மன்னார் நகரசபையின் செயலாளரின் வேண்டுகோளுக்கமைய யாழ் மாநகரசபை தீ அணைப்பு பிரிவின் அனுபவம் வாய்ந்த உத்தியோகத்தர்களினால் பயிற்சிகள் வழங்கப்பட்டு மன்னார் நகரசபையின் நீண்ட நாள் தேவைகளில் ஒன்று பூர்த்தி செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மன்னார் நகரசபையின் 2024ம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டம்

மன்னார் நகரசபையின் 2024ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினை பொது மக்கள் பார்வைக்காக மன்னார் நகரசபை பொது நூலகத்திலும் , நகரசபை அலுவலகத்திலும் மற்றும் வலையத்தளத்திலும்

கேள்வி அறிவித்தல் -2024 நீண்டகால குத்தகைக்கு கடை வழங்கல்

மன்னார் நகரசபைக்குச் சொந்தமான பஸ் நிலைய வளாகத்தினுள் அமையப்பெற்றுள்ள கடைகளினை (கடைகள்-07) நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளது இது தொடர்பாக 2024.01.19 ம் திகதிய தினக்குரல் பத்திரிகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Season Shop

தற்காலிக பண்டிகைக்கால கடைகளுக்கான படிவங்கள்2023.12.17ம் திகதியிலிருந்து 18ம்திகதிமதியம்12.30 மணியளவில் நிறைவுபெற்றுஅதற்கான கடைகள் வழங்கும் நிகழ்வு 2023.12.19ம் திகதி நண்பகல் 2;30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு கடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

Season Shop

தற்காலிக பண்டிகைக்கால கடைகளுக்கான படிவங்கள்2023.12.17ம் திகதியிலிருந்து 18ம்திகதிமதியம்12.30 மணியளவில் நிறைவுபெற்றுஅதற்கான கடைகள் வழங்கும் நிகழ்வு 2023.12.19ம் திகதி நண்பகல் 2;30 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டு கடைகள் வழங்கும் நிகழ்வு நடைபெறும்