மன்னார் நகரசபையினால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு – 2024

மன்னார் நகரசபையினால் ஒவ்வொரு வருடமும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு பற்பல உதவிகளை செய்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இம்முறை நகரசபை எல்லைக்குட்பட்ட பின் தங்கிய நிலையில் உள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட மரக்கன்றுகள் , சேதனப்பசளை மற்றும் கன்றுகளை பராமரிக்க தேவையான பைகள் என்பன  வழங்கிவைக்கப்பட்டன. இந்நிகழ்வு 28.08.2024 அன்று காலை 10.30 மணியளவில் நகரசபை பிரதான மண்டபத்தில் நகரசபை செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து  , பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் மற்றும் நிதி உதவியாளர் ஆகியோரால் வீட்டுத்தோட்ட கன்றுகள்  வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அபிவிருத்தி உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் இந் நிகழ்வு நிறைவடைந்தது. புகைப்படங்கள் சில        

பேசாலை துள்ளுகுடியிருப்பு பகுதியில் தீ அணைக்கப்பட்ட வேளை

மன்னார் பேசாலை துள்ளுகுடியிருப்பு கிராம பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினை அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிவித்தலுக்கு அமைவாக மன்னார் நகர சபை செயலாளரினால் தீ அணைப்புப் பிரிவினர்களை உரிய இடத்திற்கு அனுப்பி கிராமத்தின் பொதுமக்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் படையினரின் உதவியுடன் தீ அணைக்கப்பட்ட போது..

“சுவர்ணபுரவர” விருது நிகழ்வு – 2024

“சுவர்ணபுரவர” விருது நிகழ்வு - 2024
உள்ளூராட்சி மன்றங்களின் செயற்றிறன் மதிப்பீட்டின் (PERFECT 2.0) அடிப்படையில் எமது சபைக்கு 25.07.2024 அன்றைய தினம் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) மாண்புமிகு பிரதமர் தினேஸ் குணவர்த்தன அவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான சுவர்ணபுரவர விருது வழங்கும் நிகழ்வில் மன்னார் நகரசபை 7வது இடத்தை பெற்றுக்கொண்டது.
நாடு முழுவதுமுள்ள 276 உள்ளூராட்சி மன்றங்களுக்கு கட்டம் கட்டமாக நடத்தப்பட்ட சபைகளின் செயலாக்க மதிப்பீட்டின் அடிப்படையில் 41 நகரசபைகளில் மன்னார் நகரசபை 7வது இடத்தை தனதாக்கி “ஸ்வர்ணபுரவர” தேசிய விருது பெற்றுக்கொண்டது.
இவ் விருதை பெறுவதற்கு அயராது உழைத்து ஒத்துழைப்பை வழங்கிய நகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மன்னார் நகர சபையுடன் எப்போதும் எமது சபையின் சட்டதிட்டங்களை மதித்துச் செயற்படுத்தும் பொது மக்கள் அனைவருக்கும் நகரசபை குடும்பம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
செயலாளர்,
மன்னார் நகரசபை
    

உள்ளுர் உற்பத்திகளை farmtogate என்ற இணையத்தில் பதிவு செய்தல் – 2024

மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் மக்களுக்காக ஒரு சிறந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் வாடகைக்கு விடப்படும் விடயங்கள், உங்களால் வழங்கப்படும் சேவைகளை farmtogate என்ற இணையதளத்தின் மூலம் இலவசமான முறையில் பதிவு செய்து வாடிக்கையாளருடன் இணைந்து கொள்ள முடியும். இன்றே இணைந்திடுங்கள்.
எமது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் உங்கள் சுயதொழில் தொடர்பான விபரங்களை வழங்கவும்.
தொடர்புகளுக்கு - 0232222285
 

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் – 2024

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் - 2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நகரசபை எல்லைக்குட்பட்ட காணிகளை துப்பரவாக்கி அதனை எல்லைப்படுத்தியமை மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மன்னார் எல்லைக்குள் காணப்படும் குளங்களை துப்பரவு செய்து அதனை அழகாக்கியமை,பல்வகை உயிர்களின் நன்மை கருதி பொது இடங்களில் வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை அப்புறப்படுத்தியமை அதுமட்டுமன்றி பொலித்தீன் பாவனையை குறைக்க பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை மற்றும் பசுமை மிக்க அழகான கிராமத்தை உருவாக்கும் பொருட்டு விளையாட்டு மைதானம்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் மர நடுகை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால சந்ததிக்கு  நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க வழிகோலியமை இச்செயற்பாட்டிற்கு மாணவர்களின் பங்களிப்பும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் பதிவுகள் சில

             

இணையவெளியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டு நிகழும் வன்முறை/ துன்புறுத்தல்கள்

பால் நிலையை அடிப்படையாகக் கொண்டு இணையவெளியில் நிகழும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில்  காலத்திற்கேற்ற பிரச்சினைகளை ப் பிரதிநிதித்துவப்படுத்தி  அச்சிடப்பட்ட கார்ட்டூன்கள் இளம் சமூகத்தை  தீய வழியில் பயணிப்பதை இடைநிறுத்தி அவர்கள் சிந்தித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க உறுதுணையாக அமைகின்றது.  

மன்னார் நகரசபையின் பொது நுாலகத்தில் இலவசமாக அங்கத்துவம் வழங்கல் – 2024

மன்னார் நகரசபையின் பொது நுாலகத்தில் இலவசமாக அங்கத்துவம் வழங்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. எனவே ஆர்வம் உள்ள நலன் விரும்பிகள் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகள் அதில் ஈடுபாடு கொண்டு தங்களது வாசிக்கும் செயற்றிறனை வளர்த்து சிறந்த வாசகர்களாக மாறுங்கள்.

 

 

LDSP திட்டத்தின் ஊடாக மன்னார் நகரசபையினால் கடைத்தொகுதி அமைப்பதற்குஅடிக்கல் நாட்டும் நிகழ்வு 06.05.2024 அன்று ஆரம்பிக்கப்பட்ட தருணங்கள்

LDSP திட்டத்தின் ஊடாக மன்னார் நகரசபையினால் கடைத்தொகுதி அமைப்பதற்கு இன்று (06.05.2024) அடி கல் வைக்கும் நிகழ்வு மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது, குறித்த நிகழ்வை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் முதல் அடிக்கல் நாட்டப்பட்டு நிகழ்வு  ஆரம்பிக்கப்பட்டது,
குறித்த நிகழ்வில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், சபை நிர்வாக உத்தியோகத்தர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்தகாரர் கலந்து கொண்டனர்..
      

பூஜ்ஜியம் (zero) கழிவு தினம்

பூஜ்ஜியம் (zero) கழிவு தினத்தை முன்னிட்டு 30.03.2024 அன்று மன்னார் நகர சபையினால் மன்னார் பிரதான பாலம், மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தை போன்ற இடங்கள் துப்புரவு செய்யும் தருணங்கள்......

கேள்வி அறிவித்தல் uppling of Type – II Soil (Hard Earth) சபை நிதி வேலைத்திட்டம் – 2024

கேள்வி அறிவித்தல் - suppling of Type - II Soil (Hard Earth)
சபை நிதி வேலைத்திட்டம் - 2024
மன்னார் பொது விளையாட்டு மைதானம் மற்றும் நவீன கடைத்தொகுதி அமைக்கப்பட்ட காணிக்கு Land Filling செய்வதற்கு Type II Soil - Hard Earth தேவைப்படுதால் வேலைக்கான கேள்வி அறிவித்தல் 08.04.2024ம் திகதிய
தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடைய கேள்விதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பம் பெறும் திகதி – 08.04.2024 தொடக்கம் 22.04.2024- 2.00PM வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 09.00 மணிக்கும் 2.00 மணிக்கும்) பெற்றுக்கொள்ளலாம்.