உள்ளுராட்சிமன்றத்தின் சொத்துக்களை பயன்படுத்தி வழங்கப்படும் சேவை 

வீதிகளை ஊடறுத்து வெட்டுவதற்கான அனுமதி 

உள்ளுராட்சி மன்றமானது தனது அதிகாரப் பிரதேசத்திற்குள் கிடைக்கின்ற பௌதீக மனிதவளங்களை ஒருங்கிணைத்து உட்கட்டமைப்பு சேவையினை அங்கீகரிக்கப்பட்ட சட்டதிட்டங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு சட்டரீதியான அங்கீகாரம் உள்ளுராட்சி மன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. சில அபிவிருத்தி வேலைகளின் பொது வீதிகளுக்கு சேதங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படமுடியாததொன்றாகும். அதேவேளை வீதிகளுடாக மேற்கொள்ளப்படும் வேலைகள் சிறப்பாகவும் திருப்தியாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்வதுடன், வீதியில் ஏற்பட்ட பாதிப்புக்களை நிவர்த்தி செய்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பிரதேச அபிவிருத்திக்கு தடை ஏற்படாத வகையிலும் விதிக்கப்பட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றி அனுமதி வழங்கப்பட வேண்டும்.