மன்னார் நகரசபையின் பிரதேச மட்ட பங்கேற்பு மேம்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் 2024-2027

மன்னார் நகரசபையின் பிரதேச மட்ட பங்கேற்பு மேம்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டம் தயாரித்தல் 2024-2027

 

மன்னார் நகரசபை நிர்வாக எல்லைக்குட்பட்ட 7 வட்டாரங்களில் பங்கேற்பு மேம்படுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டம் தயாரிப்பதற்காக கடந்த 20.11.2023ம் திகதி தொடக்கம் 24.11.202.3 வரை ஏழு வட்டாரத்தின் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் தேவைகள் ஒற்றுமையுடன் நிலைத்து நிற்கும் திட்டங்களை முன்னுரிமைப்படுத்தி தயாரிக்கப்பட்டது.
வட்டார ரீதியில் தெரிவுசெய்யப்பட்டதைக் கொண்டு பிரதேச மட்ட தேவைகளை முன்னுரிமைப்படுத்துவதற்காக வட்டாரங்களில் தெரிவு செய்யப்பட்ட திட்டமிடல் குழு உறுப்பினர்களைக் கொண்டு நகரசபை செயலாளர் தலைமையில் குறித்த திட்டம் தயாரிப்பதற்கான வளவாளர்களைக் கொண்டு இன்று திட்ட மீள் ஆய்வு கலந்துரையாடல் மன்னார் நகரசபை அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.
கலந்து கொண்ட பிரதிநிதிகள் திட்டங்களை ஆராய்ந்து முன்னுரிமைப்படுத்தியிருந்தனர். அதுமட்டுமன்றி இந் நிகழ்வில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருகை தந்து திட்டம் தயாரிப்பதனைப் பார்வையிட்டு இது தெதாடர்பான ஆலோசனைகளையும் ,கருத்துக்களையும் வழங்கினார் . குறித்த நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் ,முகாமைத்துவ உத்தியோகத்தர்,சனசமூக நிலைய உத்தியோகத்தர்,தொழில்நுட்ப உத்தியோகத்தர் ,வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *