மக்கள் பங்களிப்புடனான பாதீட்டு முன்மொழிவு கூட்டம் – 2025
மன்னார் நகரசபையின் 2025 ம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தினை (Budget) தயாரிப்பதற்கு முன்பான மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வட்டாரத்திற்குமான கூட்டம் குறிப்பிட்ட திகதிகளில் நடைபெற்று அவர்களின் தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டன. பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடனான பொதுகூட்டம் 2024.09.10 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் பள்ளிமுனை கிழக்கு ,மேற்கு சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்று கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் மன்னார் நகரசபை மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு நண்பகல் 2.30 மணியளவில் உப்புக்குளம் வடக்கு , தெற்கு , மூர் வீதி ஆகிய சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்று கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் அபிவிருத்தி வேலைகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் அவர்களது அத்தியாவசிய தேவைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டது. இவ்வாறாக ஒரு நாளில் காலை, மாலை என இரு தடவைகளில் வட்டாரங்களிற்கான கூட்டம் இடம்பெற்றறது.
இதில் மன்னார் நகரசபையின் அலுவலர்கள்,சனசமூகநிலைய பிரதிநிதிகள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்கள் பிரிவுக்கான அபிவிருத்தி வேலைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி உதவினார்கள்.