முன்பள்ளிகள்
மன்னார் நகர சபைக்குரிய பாலர் பாடசாலை உள்ளுராட்சி மன்ற நிதியின் மூலம் ஏற்படுத்தபட்ட அடிப்படை வசதிகளுடன் இவ் பாலர் பாடசாலை இயங்கி வருகின்றது .அத்துடன் பயிற்சி பெற்ற ஆசிரியர் இருவர் கடமையாற்றி வருகின்றனர்.
2024ம் ஆண்டு தை மாதம் புதிய பிள்ளைகளை வரவேற்றல் நிகழ்வு நடைபெற்றது. பெற்றோர் பிள்ளைகளின் தரவுகளை சேகரித்து பதிவு செய்யப்பட்டது. பெற்றோர்களுடனான ஒன்று கூடல் சிரமதானம் பணிகள் என்பன இடம் பெற்றதோடு பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளின் விசேட தேவை பற்றி அறிந்து கொண்டதுடன் பிள்ளைகளுக்கான மருத்துவ பரிசோதனையும் மேற் கொள்ளப்பட்டது.
முன்பள்ளி சிறார்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடுக்கும் பொருட்டு அவர்களுக்கான உடற்திணிவுச்சுட்டி எடுக்கப்பட்டு தற்காலத்தில் போசணை குறைபாடுடைய பிள்ளைகள் நிறைய காணப்படுவதால் அவர்களது அக்குறைபாட்டை தீர்ப்பதற்கேதுவாக போசாக்கு துணை உணவு அந்தந்த சபைகளினால் வழங்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
பிள்ளைகளின் தரத்திற்கேற்ப முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளரின் ஆலோசனைக்குழுவுக்கு அமைவாக கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட்டனர் அதாவது ஓட்டுச்சித்திரங்கள், ஆக்கங்கள், களிமண், உருவங்கள், கழிவுப்பொருட்களில் ஆக்கங்கள், அச்சுப்பதித்தல் உருவங்கள் பொருத்துதல் போன்ற ஒருங்கிணைந்த செயற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும் முன் பள்ளியில் சிறுவர் தினம், ஆசிரியர் தினம், கிறிஸ்மஸ் தினம் என்பன மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.