மன்னார் நகரசபையில் சமயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றது.அந்த வகையில் கறிஸ்தவர்களின் யேசு பாலன் பிறப்பை கொண்டாடும் முகமாக ஒளி விழாவானது 27.12.2024 அன்று நகரசபையின் கலாச்சார மண்டபத்தில் வெகு விமர்சையாக இடம்பெற்றது. முதலில் அருட் தந்தையின் திருப்பலி ஒப்புக் கொடுத்தலுடன் ஒளி விழாவானது ஆரம்பமானது அதனைத் தொடர்ந்து நகரசபை கணக்காளர் அவர்களினால் சிறப்புரை வழங்கப்பட்டது. பின்பு அருட்தந்தை அவர்களினால் ஆசி உரை வழங்கப்பட்டது. தொடர்ந்து நகரசபை உத்தியோகத்தர்களது பாடல், முன்பள்ளி மாணவர்களின் நாடகம், நடனம் மற்றும் பேச்சு போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. நிகழ்வை வழங்கிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி ஊக்குவித்தனர். தொடர்ந்து நகரசபையின் உத்தியோகத்தர் தர்சினி அவர்களினால் நன்றியுரை வழங்கப்பட்டு பிற்பகல் 12.30 மணியளவில் இவ் விழாவானது இனிதே நிறைவு பெற்றது.