கர்ப்பிணி தாய்மார், பாலுாட்டும் தாய்மார் மற்றும் முதியோருக்கான உணவுப்பொதி வழங்கல் – 2024
மன்னார் நகரசபையின் நிதி ஒதுக்கீட்டில் ஒவ்வொருவருடமும் கர்ப்பிணித் தாய்மார் மற்றும் பாலுாட்டும் தாய்மாருக்கான போசாக்கு உணவுப்பொதி வழங்குவது தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. இந்த வகையில் இம்முறையும் கர்ப்பிணித் தாய்மார்,பாலுாட்டும் தாய்மாருக்கு மாத்திரமின்றி இம்முறை கஸ்ரப்பட்ட ஆரவற்ற முதியோருக்கும் போசாக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது. இந்நிகழ்வு செயலாளர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பிராந்திய உள்ளுராட்சி அலுவலகத்திலிருந்து சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையிலிருந்து குடும்ப நல சுகாதார உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், நகரசபை கணக்காளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர். நகரசபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந் நிகழ்வின் பதிவுகள் சில………