அண்மையில் ஏற்பட்ட பெங்கல் புயல் அனர்த்த நிலைமையில் போது சிறப்பாக களப்பணியாற்றிய உள்ளுராட்சி மன்ற ஊழியர்களை கௌவரவிக்கும் முகமாக வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் தலைமையில் (04.12.2024) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வின் போது மன்னார் நகரசபை செயலாளர் தலைமையில் வெள்ள அனர்த்த பணிகளில் களப்பணியற்றிய 14 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டனர். குறித்த நிகழ்வில் வட மாகாண கௌரவ ஆளுனர் பிரதம விருந்தினராகவும், வட மாகாண பிரதம செயலாளர் சிறப்பு விருந்தினராகவும் எமது மாவட்ட அரச அதிபர், ஏனைய மாவட்ட அரச அதிபர்கள், எமது உள்ளுராட்சி உதவி ஆணையாளர், ஏனைய மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் யாழ். மாநகர ஆணையாளர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மன்னார் நகரசபை ஊழியர்களுக்கு
வட மாகாண கௌரவ ஆளுனரால் மெச்சுரை வழங்கப்பட்ட போது…




