இலங்கை பொது நிதி கணக்கியல் சங்கத்தினால் சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது வழங்குவதற்காக நாடளவில் உள்ள திணைக்களங்களுக்கு இடையிலான நடத்தப்பட்ட போட்டியில் 2023 ஆம் ஆண்டிற்காக தெரிவு செய்யப்பட்டு 02.12.2024 அன்று பண்டாரநாயக்கா ஞாபாகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற “சிறந்த ஆண்டு அறிக்கை மற்றும் கணக்கு விருது விழா 2024” நிகழ்வில் மன்னார் நகர சபைக்கு சிறப்பு சான்றிதழ் கிடைத்துள்ளது. இவ்விருதை பெறுவதற்காக கடந்த ஆண்டு அயராது பணியாற்றிய உத்தியோகத்தர்கள் மற்றும் இவ்வறிக்கையினை திறம்பட உருவாக்கிய எமது உத்தியோகத்தா்களுக்கும் சபையின் சாா்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.