உள்ராட்சி மன்றங்களுள் ஒன்றான மன்னார் நகரசபையில் Cleanup Srilanka என்னும் வேலைத்திட்டத்தினை குறித்த திகதியில் பல இடங்களில் மேற்கொண்டு இலங்கையின் சுத்தத்தை நகரசபை பிரபல்யப்படுத்தியுள்ளது. அந்த வகையில் மன்னார் நகரசபையில் கடமையாற்றுகின்ற உழியர்கள் நகரசபை எல்லைக்குட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குறித்த செயற்பாட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள்.
பிளாஸ்ரிக் , பொலித்தீன், வெற்றுப்போத்தல்கள் மற்றும் உக்கக்கூடிய . உக்கமுடியாத கழிவுகள் என அனைத்தையும் தரம்பிரித்து உரிய முறையில் அகற்றி நகரசபை கிராமங்கள் தூய்மையுடைய அழகிய கிராமமாக மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றது. மன்னார் நகரசபையின் எல்லைக்குட்பட்ட பேரூந்து தரிப்பிடம், மீன் சந்தை, நகரசபைக் கடைத்தொகுதி மற்றும் கழிவு முகாமைத்துவ மையம் போன்ற இடங்களில் Cleanup Srilanka என்னும் வேலைத்திட்டத்தினை முன்நிறுத்தி சிரமதானப் பணிகள் மற்றும் பசுமையான கிராமமாக காட்சிப்படுத்தும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமன்றி சிறுவர்களின் கேந்திர நிலையமான சிறுவர் பூங்கா போன்றனவும் தூய்மைப்படுத்தப்பட்டு கண்களுக்கு விருந்தளிக்கும் முகமாக பச்சைப்பசேலன மரக்கன்றுகளை நட்டு அழகான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Cleanup Srilankaஎன்ற குறித்த வேலைத்திட்டமானது 28.09.2024 அன்று சுமுகமான முறையில் ஆறு இடங்களில் நடைபெற்று மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்கள் தூய்மையை நிலைநாட்டியுள்ளது. இச் செயற்பாடானது தனி ஒரு நாள் இல்லாது இனி வருங்காலங்களில் இதனை மாதத்திற்கு இரு தடவையேனும் இச் செயற்பாட்டை நகரசபை மேற்கொண்டு இலங்கையை ஊடநயnரி ளுசடையமெய ஆக பிரபல்யப்படுத்தும்.
நகரசபை பணியாளர்களினால் பேரூந்து நிலையம், கடைத்தொகுதி, சிறுவர் பூங்கா, மீன் சந்தை போன்ற இடங்களில் சிரமதானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதனை கீழ் வரும் புகைப்படங்களின் ஊடாக காணலாம்…