உள்ளுர் உற்பத்திகளை farmtogate என்ற இணையத்தில் பதிவு செய்தல் – 2024

மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட சுயதொழில் முயற்சியில் ஈடுபடும் மக்களுக்காக ஒரு சிறந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் மற்றும் வாடகைக்கு விடப்படும் விடயங்கள், உங்களால் வழங்கப்படும் சேவைகளை farmtogate என்ற இணையதளத்தின் மூலம் இலவசமான முறையில் பதிவு செய்து வாடிக்கையாளருடன் இணைந்து கொள்ள முடியும். இன்றே இணைந்திடுங்கள்.
எமது அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு உங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் உங்கள் சுயதொழில் தொடர்பான விபரங்களை வழங்கவும்.
தொடர்புகளுக்கு - 0232222285
 

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் – 2024

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித் திட்டம் - 2024

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மன்னார் நகரசபையினால் பல்வேறான நிகழ்ச்சித் திட்டங்கள்  மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் நகரசபை எல்லைக்குட்பட்ட காணிகளை துப்பரவாக்கி அதனை எல்லைப்படுத்தியமை மற்றும் நீர் நிலைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மன்னார் எல்லைக்குள் காணப்படும் குளங்களை துப்பரவு செய்து அதனை அழகாக்கியமை,பல்வகை உயிர்களின் நன்மை கருதி பொது இடங்களில் வீசப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை அப்புறப்படுத்தியமை அதுமட்டுமன்றி பொலித்தீன் பாவனையை குறைக்க பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியமை மற்றும் பசுமை மிக்க அழகான கிராமத்தை உருவாக்கும் பொருட்டு விளையாட்டு மைதானம்,சிறுவர் பூங்கா போன்ற பகுதிகளில் மர நடுகை செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எதிர்கால சந்ததிக்கு  நல்லதோர் எதிர்காலத்தை உருவாக்க வழிகோலியமை இச்செயற்பாட்டிற்கு மாணவர்களின் பங்களிப்பும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

உலக சுற்றாடல் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சித்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளின் பதிவுகள் சில

             

இணையவெளியில் பால்நிலையை அடிப்படையாகக் கொண்டு நிகழும் வன்முறை/ துன்புறுத்தல்கள்

பால் நிலையை அடிப்படையாகக் கொண்டு இணையவெளியில் நிகழும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில்  காலத்திற்கேற்ற பிரச்சினைகளை ப் பிரதிநிதித்துவப்படுத்தி  அச்சிடப்பட்ட கார்ட்டூன்கள் இளம் சமூகத்தை  தீய வழியில் பயணிப்பதை இடைநிறுத்தி அவர்கள் சிந்தித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க உறுதுணையாக அமைகின்றது.