மன்னார் நகரசபையினால் முன்பள்ளி மாணவர்களுக்கு 01.03.2024ம் திகதி போசாக்கு துணை உணவு வழங்கப்பட்ட தருணங்கள் – 2024
மன்னார் நகரசபையில் ஒவ்வொரு வருடமும் போசாக்கு வழங்கும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் மன்னார் நகரசபை எல்லைக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலை மாணவர்களுக்கு இம் முறையும் போசாக்கு துணை உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு 01.03.2024ம் ஆண்டு பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களினால் சம்பிரதாயமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் நகரசபையின் செயலாளர், பிராந்திய உள்ளுராட்சி ஆணையாளரின் அலுவலர் ,நகரசபை அலுவலர்கள் , முன்பள்ளி ஆசிரியர்கள்மற்றும் பெற்றோர்கள் ,நலன் விரும்பிகள் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.