மன்னார் நகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் கற்பிணித் தாய்மார்களுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கும் போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் – 2023

மன்னார் நகர சபை அதிகார எல்லைக்குட்பட்ட மிகவும் பின் தங்கிய பிரதேசங்களில் வாழும் கற்பிணித் தாய்மார்களுக்கும் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கும் போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் – 2023

 

மன்னார் நகரசபையின் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் போசாக்குத் திட்டத்திற்கான ரூபா 100,0000.00 ஒதுக்கீட்டின் கீழ் போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஒழுங்கு செய்யப்பட்டு பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தியாக்கப்பட்டு, போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வானது நகர சபையின் மதிப்பிற்குரிய செயலாளர் தலைமையில் 12.01.2024 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு நகர சபையின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வானது ஒரு நிமிட மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து நகர சபையின் நிர்வாக உத்தியோகத்தர் அவர்களினால் வரவேற்புரையும் இத்திட்டம் தொடர்பான விளக்கவுரையும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் நகர சபையின் முகாமைத்துவ உத்தியோகத்தர் , வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவலகத்தின் உத்தியோகத்தர் மற்றும் நகர சபை உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
மேற்படி நிகழ்வின் பயனாளிகளாக சுகாதார வைத்திய அதிகாரியினால் பரிந்துரைக்கப்பட்ட மன்னார் நகர சபை அதிகார எல்லைப்பிரதேசத்தினுள் பின் தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் 180 கற்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
இறுதியாக நகர சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி ஜெயன்சியா தியாகராசா அவர்களால் நன்றியுரை வழங்கப்பட்டு நிகழ்வானது 11..30 மணியளவில் இனிதே நிறைவடைந்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *