உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான மன்னார் நகரசபையில் பொதுமக்களின் நலன் கருதி அவர்களது ஆரோக்கியத்தை பேணும் வகையில் போசாக்கு உணவுத்திட்டம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்குவதை தொன்று தொட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றது . அதாவது மன்னார் மாவட்டத்தில் நகரசபை எல்லைக்குட்பட்ட மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இவ் போசாக்கு உணவு வழங்கப்பட்டு வருகின்றது.மற்றும் இவ் உணவுத்திட்டத்தில் முதியோர்களும் உள்வாங்கப்படுவதுடன் இத் திட்டம் அவர்களது வாழ்வில் பெரும் முன்னேற்றத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அந்த வகையில் 2023ம் ஆண்டிற்கான போசாக்கு உணவு வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் அண்மையில் மிக சிறப்பாக இடம்பெற்றது. கிட்டத்தட்ட 180 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு வழங்கி அவர்களது ஆரோக்கிய வளர்ச்சிக்கு நகரசபை தங்களால் முடிந்தளவு சேவை ஆற்றி வருகின்றது. அதுமட்டுமன்றி இனிவருங்காலங்களிலும் இதனுடைய செயற்பாடுகள் உச்ச அளவில் அடையும் என்பதில் ஜயமில்லை.