நூலக சேவை
மன்னார் நகர சபை நூலகத் துணைவிதிகள் மற்றும் நியமத்துணை விதிகளை கொண்டு மன்னார் பிரதான வீதியில் அமைந்து சில பணிகளை ஆற்றிக்கொண்டு வருகின்றது. அதுமட்டுமன்றி சிறியவர் முதல் பெரியவர் வரை நூல்கள் மற்றும் பத்திரிகைகளை அமைதியான முறையில் வாசித்து விளங்கிக் கொள்வதற்கேதுவாக அமைந்துள்ளது.
சபையினால் நிர்வாகிக்கப்படுகின்ற நூலகமானது மக்களில் அதிக எண்ணிக்கையானோருக்கு சேவைகளை ஆற்றி வருகின்றது அத்துடன் மும்மொழிகளிலும் ஆக்கப்பட்டுள்ள வெளியீடுகள் இங்கு வைக்கப்பட்டுள்ளது. சகல இன மக்களுக்கும் சேவையைப் பெற்றுக்கொள்ள கூடியதாக உள்ளது. மேலும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வின் போது பொது நடமாடும் நூலக சேவைகளை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் பாலர் பாடசாலைகளுக்கு சிறுவர்களுக்கான நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு பேணப்பட்டு வருகின்றது.
அத்துடன் நூலகங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. நூலக அடிப்படை முகாமைத்துவ முறைகள் பயன்படுத்தப்பட்டு மக்களின் முறைப்பாடுகள் எடுக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.
அத்துடன் முக்கியமான நூல்களை இலத்திரனியல் மயப்படுத்துவதற்கான ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றது.வாசிப்பு மாத நிகழ்வையொட்டி ஒவ்வொரு வருடமும் பல போட்டிநிகழ்ச்சிகள், நடமாடும் நூலகசேவை,நூல்கொள்வனவு, நூல் அன்பளிப்புக்கள், கண்காட்சிகள், கல்வி கருத்தரங்குகள் என்பன இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.